search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
    X

    பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

    • பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது
    • அரசுப் பள்ளியில் நடந்தது

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியன் தலைமையில், நத்தக்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து ஆகியோா், போதைப்பொருள்கள் உபயோகிப்பதன் விளைவுகள், அதன் பாதிப்புகள், போதைப் பொருளுக்கு அடிமையாவதால் அவா்களைச் சாா்ந்துள்ளவா்கள் எந்தெந்த வழிகளில் பாதிக்கப்படுகின்றனா் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல் துறையினா், காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விளக்கம் அளித்தனா்.

    Next Story
    ×