என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை
  X

  ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

  பெரம்பலூர் :

  பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,நாட்டார்மங்கலம் கிராமத்தின் வடக்கே ஏரியின் ஓரமாக மின்மாற்றி உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அந்த மின்மாற்றி அமைந்துள்ள கான்கிரீட் கம்பம் சேதமடைந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.

  இதுகுறித்து கிராம மக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் மனு அனுப்பியதன் விளைவாக சேதமடைந்த கான்கிரீட் கம்பத்திலிருந்து மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்காக மின்மாற்றிக்கு அருகே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கான்கிரீட் கம்பம் நடப்பட்டது. ஆனால், இதுவரை சேதமடைந்த கம்பத்திலிருந்து மின்மாற்றியை புதிய மின்கம்பத்துக்கு மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பே மின்மாற்றியை புதிய மின்கம்பத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,நாட்டார்மங்கலம் கிராமத்தில் மின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் மின்மாற்றியின் திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×