search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலிப்பணியிடங்களை நிரப்ப சாலைப்பணியாளர்கள் கோரிக்கை
    X

    காலிப்பணியிடங்களை நிரப்ப சாலைப்பணியாளர்கள் கோரிக்கை

    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சாலைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் 2 நாள் நடைபெறும் மாநில மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். துணைப்பொது செயலாளர்கள் ராஜாசிதமபரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில துணை தலைவர் செல்லச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், சின்ராசு, ராஜேந்திரன், சங்கரபாண்டி, மாநில செயலாளர்கள் சிவானந்தன், சென்னியப்பன், ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர்.

    இதில் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்கவேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் படி வழங்கவேண்டும். வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேகதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×