என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதனகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி விழா
- மதனகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது
- சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நவநீதகிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நவநீதகிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பட்டாபி பட்டாட்சியர் நடத்தி வைத்தார். விழாவின் தொடர்ச்சியாக பெரம்பலூர் எடத்தெரு கிருஷ்ணன் கோவிலில் ஸ்ரீ சந்தான கிருஷ்ணன் தொட்டில் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று (20ம்தேதி) காலை 10 மணி அளவில் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி சமேத பூமா தேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து , எடத்தெரு கிருஷ்ணன்கோவில் வந்தடைந்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உரியடி உற்சவம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.






