என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நல வாரிய ஆலோசனை கூட்டம்
- பெரம்பலூரில் தொழிலாளர் நல வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் நடந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நல வாரிய திட்டங்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கர் தலைமை வகித்து பேசுகையில், கடந்த மாதம் நலவாரிய திட்ட ஆன்லைன் சர்வர் முடங்கியதால் அதற்குரிய கால அவகாசம் நீட்டிப்பு ஒரு மாதம் காலம் வழங்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் எல்அண்ட்டி நிறுவன சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்துள்ள கொத்தனார், கம்பி கட்டுநர், தச்சர், வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட கட்டுமான வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், பயிற்சி காலங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை தடுத்திடும் வகையில் உரிய உதவி தொகை வழங்கப்படுவதை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கெள்ளவேண்டும் என தெரிவித்தார்.கூட்டத்தில் வீடில்லாத ஏழை கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யப்படும் நடைமுறை சிக்கல்களை களையவேண்டும்.தொழிலாளர்கள் தொடர்பான இரட்டை பயன்பாட்டு முறைகளை உடனடியாக கவனத்தில் கொண்டு அதை தகுதி நீக்கம் செய்திட முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிற்சங்க பிரநிதிகள் வலியுறுத்தினர். இதில் ஈஸ்வரன், நெடுஞ்செழியன் உட்பட அனைத்து தொழிற்சங்களின் பிரநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.






