என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்
- பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது
- புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் 2 வது பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுதர்சன் தலைமை வகித்து பேசினார். மாநில செயலாளர் சிவக்குமார், மாநில துணை தலைவர்கள் பழனிவேல், முத்துசாமி, கருப்புசாமி, ஹரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் பத்மநாதன், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் கார்மேகம், அழகேசன், செல்வமணி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுப்பணித்துறையில் ஒப்பந்தகாரர் பதிவு மறுவகைப்படுத்துதல், வகுப்பை உயர்த்தி பதிவு செய்தல் தொடர்பாக அதற்குரிய காலஅவகாசத்தை வரும் 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கியும், ஒப்பந்தகாரர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார், முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.






