என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீத்தொண்டு நாள் வார விழா
    X

    தீத்தொண்டு நாள் வார விழா

    • தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது
    • உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட, தீயணைப்பு வீரர்கள் சிலர், தீயில் கருகி வீரமரணம் அடைந்தனர். இதனால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அம்பிகா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் அக்கீம்பாஷா மற்றும் நிலைய அலுவலர் உதயக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.பின்னர் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணித்துறை சார்பில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    Next Story
    ×