என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஅய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் வரும் 25ம்தேதி கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது, செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோயிலில் வெள்ளி தேர் இழுப்பது, பள்ளியில் காலை, மதிய உணவு வழங்குவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய பொறுப்பாளர்கள் சஞ்சீவிகுமார், விஷ்வா, வெங்கடேசன், பேரூர் பொறுப்பாளர்கள் ஸ்ரீதரன், மாவட்ட அணி நிர்வாகிகள் இளையராஜா, செந்தில்குமார், கருணாநிதி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சோழரசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×