என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு
    X

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு

    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று வேப்பூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • மெட்டல் சாலை அமைக்கவும் முடிவு

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்தின் சாதாரண குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு கூட்டத்தில் வேப்பூர் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வேப்பூர் ஒன்றிய துணைத் தலைவர் செல்வராணி வரதராஜன் நன்றி கூறினார்

    Next Story
    ×