search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆலோசனை கூட்டம்
    X

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆலோசனை கூட்டம்

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடந்தது

    பெரம்பலூர்:

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதி செய்யவும், ரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெறுவதை தவிர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் நேஷனல் வோட்டர் சர்வீஸ் போர்ட்டல் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எணை இணைத்துக் கொள்ளலாம். இது தவிர வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வுக்கு வரும் போதோ அல்லது இதற்காக வாக்குச்சாவடி அளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமிலோ, பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6 பி உடன் ஆதார் அட்டையின் நகலை தாக்கல் செய்து இணைத்துக் கொள்ளலாம். இப்பணியை விரைவாக முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×