என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • வெங்காய சேமிப்பு அமைப்பை ஏற்ப–டுத்த துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலுார் :

    பெரம்பலுார் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று நடப்பாண்டில் பெரம்ப–லுார் மாவட்டத்தில் அதிக அளவிலான வெங்காய சேமிப்பு அமைப்பைஏற்ப–டுத்த துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், சூரியஒளி மின்வேலி அமைத்தல், சூரியஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல். அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனி நபர்விவசா–யிகளுக்கு மானியம், கிராம அளவிலானஇயந்திர சேவை மையம் அமைத்தல்,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஆழத்துளை கிணறு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. விவசாயிகள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி–க்கொள்ள வேண்டும்.

    நமது மாவட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்கள் நடப்பாண்டில் சிறப்பான முறையில் துார்வாரப்பட்டுள்ளதால், பெய்துள்ள மழையில் பெரும்பலான ஏரிகள், குளங்கள், வரத்து வாய்க்கால்கள் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×