என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க ஆலோசனை கூட்டம்
- பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு பொது செயலாளர் தங்கராசு, மாநில பொது செயலாளர் விமனேஸ்வரன் ஆகியோர் பேசினர். இதில் தமிழக அனைத்து சமுதாய மக்கள் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் சங்கத்தை, பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும் இச்சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், பாரதீய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அனைத்து சமுதாய மக்கள் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் மணிவேல், 'பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட கன்வீனராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அமுதா, செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில சட்ட ஆலோசகர் மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






