என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூணாறில் 0 டிகிரி உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    செடியில் படர்ந்துள்ள உறைபனி

    மூணாறில் 0 டிகிரி உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • மூணாறில் வெப்பநிலை 9 டிகிரியிலிருந்து 6 டிகிரி, 5 டிகிரி என படிப்படியாக குறைந்து வந்தது.
    • வெப்பநிலை 0 டிகிரி வரை பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நவம்பர் முதல் குளிர்காலம் தொடங்கும். அவ்வப்போது மழை பெய்தபோதும் குளிர் அதிகரித்தே காணப்பட்டது.

    வெப்பநிலை 9 டிகிரியிலிருந்து 6 டிகிரி, 5 டிகிரி என படிப்படியாக குறைந்து வந்தது.

    டிசம்பர் மாதம் 9-ந்தேதி 5 டிகிரியும், குண்டலை எஸ்டேட் பகுதியில் 4 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவானதால் கடும் குளிர் வாட்டியது. இந்தநிலையில் லாக்காடு, தேவிகுளம், எஸ்டேட் பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் வீடு களிலேயே முடங்கி யுள்ளனர். இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தே காணப்படு கிறது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அலங்கார தோரணங்கள் மற்றும் வண்ணவிளக்குகள் போடப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    Next Story
    ×