என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தேனி-மதுரை அகல ரெயில் உள்ளூர் மக்கள் பயன்படும் வகையில் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
    X

    அகல ரெயில் பாதை பணி நிறைவடைந்தது

    தேனி-மதுரை அகல ரெயில் உள்ளூர் மக்கள் பயன்படும் வகையில் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த சில நாட்களாக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த ரெயிலை உள்ளுர் மக்கள் பயன்பெறும் வகையில் பகல் பொழுதில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    மதுரை-தேனி அகல ரெயில் பாதை திட்டம் நிறைவடைந்து கடந்த மாதம் 26-ந் தேதி இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கியது.

    மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தேனிக்கு 9.35 மணிக்கு வருகிறது. அதன்பிறகு மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டு 7.50 மணிக்கு மதுரை செல்கிறது. காலை முதல் மாலை வரை தேனி ரெயில் நிைலயத்தில் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ரெயிலை உள்ளூர் மக்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளது. மதுரையில் இருந்து தேனி வரும் வணிகர்கள், பொதுமக்கள் பகலிலேயே வேலை முடித்து மாலையில் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

    மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தேனிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு மட்டுமே இந்த ரெயில் பெரிதும் உதவி வருகிறது. காலையில் தேனிக்கு வந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு மாலையில் திரும்பி செல்ல ஏதுவாக உள்ளது. எனவே பகலிலும் ஒன்று அல்லது 2 முறை இயக்கினால் இதனை உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏதுவாக இருக்கும்.

    ரெயில் நிலையத்தில் தண்டவாளம், நடைேமடை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஏற்கனவே இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. சில மரங்கள் அதே இடத்தில் இருந்தாலும் அந்த மரத்தின் வேர்களுக்கு தண்ணீர் செல்லாத வகையில் காண்கிரீட் போட்டு பூசி விட்டனர். இதனால் மரங்கள் பட்டுப்போய் வருகின்றன.

    ஒரு மரத்தை அகற்றினால் 10 மரங்கள் நடவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ள போதிலும் அதுபோன்ற எந்த விதிகளும் இங்கு பின்பற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல ரெயில் வரும் நேரத்தில் லெவல் கிராசிங் மூடப்படுவதால் நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படு–கின்றனர். எனவே இப்பகுதி–யில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    Next Story
    ×