என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டமந்திரி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
- வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.உஷா ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
- பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டமந்திரி ஏ.என்.எம். தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சத்திய தாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொம்மி ராஜசேகர், வார்டு உறுப்பினர் புஷ்பா தசரதன், ஜான்சிராணி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.உஷா ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பள்ளி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அந்தோணி, அஷ்டலட்சுமி தாமோதரன், சற்குணம் ராஜீவ் காந்தி, வேலுமணி தேவதாஸ், ஆசிரியை குமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.






