search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டு நேர்காணலில் பங்கேற்க : கருவூலத்தில் ஓய்வூதியர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    ஆண்டு நேர்காணலில் பங்கேற்க : கருவூலத்தில் ஓய்வூதியர்கள் விண்ணப்பிக்கலாம்

    • அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம்.
    • www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற இந்திய தபால்துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூலமுகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள், ஆதார் எண், பி.பி.ஓ.எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்நாள் சான்றை www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையின் மேலாளர் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×