search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக பங்கேற்க சதுரங்க போட்டி
    X

    கோப்புபடம்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக பங்கேற்க சதுரங்க போட்டி

    • நெருப்பெரிச்சல் திருமுருகன் பள்ளியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.
    • சிறப்பாக விளையாடிய, 25 பேருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    தமிழக அரசு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வருகிற ஆகஸ்டு மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடத்துகிறது.இதில் பார்வையாளராக பங்கேற்க ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒரு சிறுவர், சிறுமியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படுகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிதிருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் ஏஞ்சல் என்ஜினீயரிங் கல்லுாரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டியைத் துவக்கி வைத்தார். மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலிருந்தும் 120 மாணவர்கள், 80 மாணவிகள் பங்கேற்றனர்.

    தலைமை நடுவர் உமாபதி தலைமையில் மனோகரன், லிங்கேஷ், அருண்குமார், கண்ணன், செல்வராஜ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

    இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் நெருப்பெரிச்சல்திருமுருகன் பள்ளியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் உடுமலை ஸ்ரீநிவாசா வித்யாலயா பள்ளி மாணவி சந்தியா முதலிடம் பிடித்தார்.இருவரும் ஆகஸ்டு மாதம் நடக்கும் 44வது உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை காண,தமிழக அரசு செலவில் சென்னை மாமல்லபுரம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.பரிசளிப்பு விழாவில் மாநில முன்னாள் தலைவர் சிவசண்முகம், பிரன்ட்லைன் பள்ளிகளின் இயக்குநர் சக்தி நந்தன், உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசுகளை வழங்கினர். முதலிடம் பிடித்தவர்களுக்கும், சிறப்பாக விளையாடிய, 25 பேருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிவன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×