search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி வாணியாற்று    உபரிநீர் ஏரிகளில் நிரப்பப்படுகிறது-  விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பாப்பிரெட்டிப்பட்டி வாணியாற்று உபரிநீர் ஏரிகளில் நிரப்பப்படுகிறது- விவசாயிகள் மகிழ்ச்சி

    • ஏரி நிரம்பும் தருவாயில் தென்கரைக்கோட்டை ஏரி, ஒன்றியம் பள்ளம் ஏரி. பறையப் பட்டி ஏரி, அரூர் ஏரி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும்.
    • கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை நல்ல முறையில் பெய்த்து வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருப்பது வாணியார் நீர்த்தேக்கம்.

    தற்போது ஆறு உற்பத்தியாகும் சேர்வராயன் மலைப்பகுதியில் பருவமழை நல்ல நிலையில் பெய்ததால் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்ட இருக்கின்றது.

    அணை முழு அளவு எட்டி கடந்த மூன்று மாதங்களாக உபரி நீர் ஆற்றில் திறந்த விடப்படுகிறது. தற்போது மீண்டும் பருவமழை கொட்டி வருவதால் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

    அணை ஏற்கெனவே நிரம்பி உள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர்திறந்து விடுவதை மேலும் நீடித்துள்ளனர். உபரி நீரைஏரிகளுக்கு நிரப்பும் பணியில் துவக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக வாணியாற்று நீர் ஜீவா நகர் அருகே உள்ள ஆலாபுரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு, ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது .

    அந்த ஏரி நிரம்பும் தருவாயில் தென்கரைக்கோட்டை ஏரி, ஒன்றியம் பள்ளம் ஏரி. பறையப் பட்டி ஏரி, அரூர் ஏரி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதி பாசன வசதி பெறும்

    கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை நல்ல முறையில் பெய்த்து வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் மூலம் நெல் மரவள்ளி கிழங்கு வாழை கடலை போன்ற பெயர்களை பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விளைச்சல் அதிகளவில் இந்த ஆண்டு ஈட்டப்படும் என்ற நம்பிக்கையும் விவசாயி களிடம் பிறந்துள்ளது.

    Next Story
    ×