என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

    • கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது.
    • விலைவாசியை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டிப்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கொடநாடு வழக்கில் நீதி விசாரணை நடைபெற வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, நாகரத்தினம், வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.கோவிந்தராஜ், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும், கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதை கண்டிப்பது, ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் வரையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் அனைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் திரளாக பங்கேற்பது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்காத தி.மு.க. அரசை கண்டிப்பது, விலைவாசியை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டிப்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் சுப்பிரமணி, கோவிந்தராஜ், முனியப்பன் உள்பட பலர் கலந் தகொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.

    Next Story
    ×