என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனமரத்துப்பட்டி கிராமம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட போது எடுத்தபடம். அருகில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்பட பலர் உள்ளனர்.
பனமரத்துப்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
- இருளர் இன குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் காந்தி நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- குடிநீர் வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, தனிநபர் வீடுகள், சாலை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள் கேட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா புதூர் புங்கனை ஊராட்சி ஒட்டம்பட்டி கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 26 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கல்லாவி ஊராட்சி, பனமரத்துப்பட்டி இருளர் இன குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் காந்தி நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, தனிநபர் வீடுகள், சாலை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்பு பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவுகளை பரிமாறினார்.
இதில் ஜோலார்பேட்டை தேவ ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம.எல்.ஏ. செங்குட்டுவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியவாணி செல்வம், மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






