என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி  ரேசன் கடையில் பாமாயில்   திருட்டு
    X

    நல்லம்பள்ளி ரேசன் கடையில் பாமாயில் திருட்டு

    • ரேசன் கடை விடுமுறை நாள் என்பதால், கடை பூட்டியே கிடந்தது.
    • 46 லிட்டர் பாமாயில் எண்ணை பாக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஜான்சன் என்பவர் எடையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில் ரேசன் கடை விடுமுறை நாள் என்பதால், கடை பூட்டியே கிடந்தது.

    இதைத்தொடர்ந்து 28-ந் தேதி காலையில் வழக்கம் போல் கடையை ஊழியர்கள் திறந்தனர். அப்போது ஊழியர்கள் ரேசன் கடையில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, அதில் 46 லிட்டர் பாமாயில் எண்ணை பாக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஜான்சன் ரேசன் கடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×