search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்ணாம்பட்டி எல்லையம்மன்  கோவிலில் பால்குட ஊர்வலம்
    X

    பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்தபடம்.

    வெண்ணாம்பட்டி எல்லையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

    • ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.
    • பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.

    இந்த மண்டல பூஜையை முன்னிட்டு வெண்ணாம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து 12 வகையான பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் எல்லயம்மனுக்கு புஷ்பங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×