என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவி.
பேட்மின்டன் போட்டியில் பழனி மாணவி சாதனை
- அகில இந்திய சப் ஜூனியர் பேட்மின்டன் தரவரிசை போட்டியில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு இறகுபந்து நடைபெற்றது.
- இதில் பழனியை சேர்ந்த மாணவி 2 வெண்கலப் பதக்கம் வென்றார்.
பழனி:
ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் நடைபெற்ற அகில இந்திய சப் ஜூனியர் பேட்மின்டன் தரவரிசை போட்டியில் 13 வயதுக்குட்பட்ட இறகுபந்து பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி 2 வெண்கலப் பதக்கம் வென்றார்.
மெயின் டிராவில் 21-12, 21-13, என்ற கணக்கில் மகாராஷ்டிரவை சேர்ந்த விதி சைனியையும், ஒரிசாவை சேர்ந்த நிமிஷா ஓஜாயை 21-6, 21-12 என்ற கணக்கில் தோற்கடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், தெலுங்கானாவை சேர்ந்த மான்யா அகர்வாலை 21-17, 12-21, 21-19 என்ற கணக்கிலும் தோற்கடித்து கடைசி 8 க்குள் நுழைந்தார். காலிறுதியில் 10- 21, 24-22, 21-19 என்ற செட் கணக்கில்தெலுங்கானாவை சேர்ந்த ஸ்நிக்தா பீரம் என்ற முன்னனி வீராங்கனையை தோற்கடித்து மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றார்.
ஆனால் அரையிறுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த தேசிய அளவில் 2ம் இடத்தில் இருந்த அவணி விக்ரம் கோவிந்த் என்ற மூத்த வீராங்கனையிடம் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் பெற்று ஆறுதல் அடைந்தார்.
இதுபோல இரட்டையர் பிரிவிலும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஜெர்சிக்கா சரின் வீராங்களையுடன் ஜோடி சேர்ந்து அரையிறுதி வரை முன்னேறி அதிலும் வெண்கல பதக்கத்தை பெற்றார். இவர் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் முன்பு இருந்த 6வது இடத்திலிருந்து 2 வது இடம் முன்னேறி உள்ளார்.
ஜெய சப்த ஸ்ரீ இந்த மாதம் வருகிற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மெயின் டிரா வீராங்கனையாக கலந்து கொண்டு தமிழக வீராங்க னையாக விளையாட உள்ளார். மேலும் இந்த ஆண்டு இவர் 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு சதீஷ்குமார் பயிற்சி அளித்து வருகிறார். ஆசியப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வது தனது கனவு என அவர் தெரிவித்துள்ளார்.






