என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சித்ரா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பாலக்கோடு வட்டாசியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா
- மனுக்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 66 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை சார் ஆட்சியர் சித்ரா விஜயன் வழங்கினார்.
- முதியோர் உதவிதொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 313 மனுக்கள் பெறப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் சார் ஆட்சியர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஜமாபந்தி கூட்டம் கடந்த வாரம் 17-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
இதில் பாலக்கோடு வரு வாய் கோட்டத்திற்குட்பட்ட புலிக்கரை, மாரண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பாலக்கோடு உள்ளிட்ட 45 கிராம அலுவலக வரவு - செலவு கணக்குகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவிதொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 313 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 66 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை சார் ஆட்சியர் சித்ரா விஜயன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ராஜசேகரன், ரேவதி, துனை தாசில்தார் சத்யபிரியா, வட்ட வழங்கல் அலுவலர் குமார், வருவாய் ஆய்வாளர்கள் முருகன், செந்தில், தாரணி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், சத்யா, குமரன், மாதேஷ், மாதப்பன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.