என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- மீதமுள்ள ஒரு கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படும்.
- விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
அதில் நாகை தொகுதியில் மட்டும் 3 கட்டடங்கள் கட்டப்பட்டு அதில் 2 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒரு கட்டடம் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்,
ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறும்போது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேங்கிக் கிடக்காமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும், விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் கெளரி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற து.தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






