என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே எருது விடும் விழா
- போக்கு காட்டியவாறு காளைகள் மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன.
- காளைகளை விரட்டிச்சென்று அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருட்களை பறிக்க முயன்றதில் சுமார் 10 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பி. முதுகானப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.
இந்த எருதுவிடும் விழாவினை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஆகியோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் பாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், ஆந்திரா,கர்நாடகாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் நன்கு அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன.
காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மைதானத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டன.
சீறிபாய்ந்த காளைகளை அடக்க ஏராளமான காளையர்களும், மாடுபிடி வீரர்களும் மல்லுக்கட்டி நின்றனர். அவர்களுக்கு போக்கு காட்டியவாறு காளைகள் மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன.
இதனை கண்டு அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். காளைகளை விரட்டிச்சென்று அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருட்களை பறிக்க முயன்றதில் சுமார் 10 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






