search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ஆண்டுகளாக பயன்பாடின்றி  கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
    X

    பயனற்ற நிலையில் உள்ள மேல்நிலைநீர் தேக்க தொட்டி.

    10 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

    • ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
    • ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நிரப்பி கிராம மக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அர்ஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தொழுமண் கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேன க்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிகரலஅள்ளி பென்னா கரம் செல்லும் சாலையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டு தொழுமண் கொட்டாய் பகுதியில் கடந்த 2012-2013 ம் ஆண்டில் புளோரைடு குறைப்பு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு பெறும் குழாயை மர்ம நபர்கள் துண்டித்ததால் கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் அன்றாட தேவை க்கான குடிநீரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் நீரேற்றம் செய்து அருகில் உள்ள சிறிய தொட்டியில் நீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

    தொழுமண் கொட்டாய் பகுதி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ளதால் கோடை காலத்தில் ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும் நிலை உள்ளதால் குடிநீர் தட்டப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தொழுமண் கொட்டாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நிரப்பி கிராம மக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×