என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி மாவட்டத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு
  X

  மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் முரளிதரன் திறந்துவைத்து பார்வையிட்டார்.

  தேனி மாவட்டத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார்.
  • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டு, தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

  தேனி:

  தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.

  மேலும் 25 பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோ ர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் உணவு பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்கி, தெரிவித்ததாவது,

  தமிழக அரசு கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்கள், ஆதரவற்ற வர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், சமூக, பொருளாதார மேம்பாடு அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

  வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்கு விப்பது, நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

  கிராமப்புறங்களில் வணிகம் மற்றும் தொழில் செய்வதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கிடும் பொருட்டு, சேவை பொருளுக்கான சந்தை மதிப்பையும், நாளடைவில் தொழில் வளர்ச்சி விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அதற்கு தேவை யான நிதி தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி நிலையான வருமானமும் லாபமும் அளிக்கக்கூடிய தொழிலை தொடங்க வழிவகை செய்வதே திட்டத்தின் முக்கிய குறி க்கோள் ஆகும். பெண் தொழில் முனைவோ ர்களுக்கு இயற்கை சார்ந்த தொழில்களுக்கு முக்கிய த்துவம் அளிக்க ப்பட்டு வருகிறது.

  இதனை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டு, தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என தெரி வித்தார்.

  Next Story
  ×