என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
ஆண்டிப்பட்டியில் புதிய ரேஷன் கடைகள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறப்பு
- ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளும், ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடைகள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய ரேஷன் கடைகளை ஆண்டிபட்டி எம்.எஎல்.ஏ. மகாராஜன் திறந்து வைத்தார்.
சில்வார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, டி. சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டிடம், கன்னியப்பிள்ளை பட்டி ஊராட்சி வரதராஜபுரம் ரோடு பிரிவில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி நகர செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், டி.சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, ராஜகோபாலன்பட்டி ஊராட்சித் தலைவர் வேலுமணி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






