என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாசனத்திற்கு தடையாக வாய்க்காலில் மண்டியுள்ள வெங்காயதாமரை செடிகள்.
புத்தூர் வாய்க்காலில் வெங்காய தாமரை செடிகள் அகற்றப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
- பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் பகுதியில் உள்ள புத்தூர் வாய்க்காலில் ஏராளமாய் வெங்காய தாமரை செடிகள் மண்டியுள்ளது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.
அதனால் புத்தூர் வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறக்கூடிய கொ க்கேரி, உடையார்கோயில், புத்தூர் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள ஆயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது விவசாய நிலங்களை பாதுகாக்க உடனடியாக சாலியமங்களம் பகுதியில் புத்தூர் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story






