search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை அதிகரிப்பால் சின்னமனூரில் வெங்காய அறுவடை பணிகள் தீவிரம்
    X

    வெங்காய அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    விலை அதிகரிப்பால் சின்னமனூரில் வெங்காய அறுவடை பணிகள் தீவிரம்

    • தற்போது வெங்காயத்திற்கு போதிய விலை கிடைப்பதால் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • 65 நாட்கள் பயிரான வெங்காயம் கடந்த வருடம் விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை அதிகரித்தது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வீரபாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, மலர்கள், விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி பயிராக வெங்காயமும் அதிகளவில் பயிரிடப்பட்டு ள்ளது.

    திண்டுக்கல்லில் இருந்து விதை வெங்காயம் வாங்கி விதைப்பு பணி நடைபெற்று வந்தது. தற்போது வெங்காயத்திற்கு போதிய விலை கிடைப்பதால் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து உழவர்சந்தை மற்றும் வார ச்சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் வியாபாரிகளும் நேரடியாக வந்து வெங்கா யத்தை வாங்கி செல்கின்ற னர். தற்போது வீரபாண்டியில் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி செல்வி என்பவர் தெரிவிக்கையில்,

    65 நாட்கள் பயிரான வெங்காயம் கடந்த வருடம் விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை அதிகரித்தது. தற்போதும் ஒரு சில பகுதிகளில் விலை குறைவாகவும், மற்ற பகுதி களில் விலை கூடுதலாகவும் விற்பனையாகிறது. பெரும்பாலான இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.

    Next Story
    ×