என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூர் நெசவாளர் தெருவில்  வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
  X

  ஓசூர் நெசவாளர் தெருவில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பத்மநாபனின் மனைவி மாடியில் இருந்துள்ளார்.
  • உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 31).இவரது வீடு தரைத்தளம் மற்றும் மாடி கொண்டது.

  பத்மநாபனின் மனைவி மாடியில் இருந்துள்ளார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பத்மநாபன் கீழ் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகைகள், 3590 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.

  அதிர்ச்சியடைந்த பத்மநாபன் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை சோதனை மேற்கொண்டு பத்மநாபன் வீட்டில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×