என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி லாரி டிரைவர் பலி
- கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
கிருஷ்ணகிரி,
உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டம் ஷோரா ஸ்பங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசன் (வயது33). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நானாசந்த் (வயது 33).
சம்பவத்தன்று இருவரும் கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி ேதசிய ெநடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ராம்கிசன் படுகா யமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றனர்கள் நானாசந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story