என் மலர்
உள்ளூர் செய்திகள்

வன உயிரின வார விழாவையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகள்
- போட்டிகளை உதவி வனப்பாதுகாவலர்கள் வெங்கடேஷ்பிரபு, ராஜமாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,செப்.25-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வன உயிரின வாரவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவிலான ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை உதவி வனப்பாதுகாவலர்கள் வெங்கடேஷ்பிரபு, ராஜமாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் தேவானந்தன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மகேந்திரன், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வண்டலூர் அறிஞர் அண்ணா தேசிய பூங்காவில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அல்போன்சா மேரி, திவ்யலட்சுமி, ரமேஷ், ஹசினாபேகம், சாந்தி, பிரதீபா, கிரேஸிராணி, செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.






