என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் பகுதியில் வரலட்சுமி பண்டிகையையொட்டி   விரதமிருந்து வழிபட்ட சுமங்கலி பெண்கள்
    X

    ஓசூர் பகுதியில் வரலட்சுமி பண்டிகையையொட்டி விரதமிருந்து வழிபட்ட சுமங்கலி பெண்கள்

    • இந்த மாநிலங்களின் எல்லையருகே இருப்பதால், இங்கும் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • கலசம் வைத்தும் பூக்களால் அலங்கரித்தும், பூஜை பொருட்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.

    ஓசூர்,

    சுமங்கலிப்பெண்கள் சிறப்பாக கொண்டாடும் வரலட்சுமி நோன்பு இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்கள் விரதம் இருந்து பண்டிகையை கொண்டாடினார்கள்.

    வரலட்சுமி பண்டிகையை, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், இந்த மாநிலங்களின் எல்லையருகே இருப்பதால், இங்கும் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    பண்டிகையையொட்டி, பெண்கள் வீடுகளை அலங்கரித்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர்.

    தொடர்ந்து பூஜை அறையில் வரலட்சுமி அம்மனை அலங்கரித்து வைத்து, கலசம் வைத்தும் பூக்களால் அலங்கரித்தும், பூஜை பொருட்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.

    மேலும், சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள்,குங்குமம், பழம், தேங்காய் ஆகிய தாம்பூல பொருட்களையும் மற்றும் துணியையும் வழங்கி மகிழ்ந்தனர்.

    Next Story
    ×