என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி   பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்   -மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் வழங்கினார்
    X

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் -மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் வழங்கினார்

    • மேற்கு ஒன்றியத்தின் சார்பில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு நல திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பாப்பி ரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பாப்பிரெட்டிப் பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் பொம்மிடி ஊராட்சி, சினிமா தியேட்டர், சந்தையூர் நான்கு ரோடு, ஊராட்சி மன்ற அலுவலக வாளாகம் ஆகிய இடங்களிலும், மெணசி ஊராட்சி, மெணசி மற்றும் விழுதுப்பட்டி, கவுண்டம் ஆகிய கிளை கழகங்களின் சார்பாக தி.மு.க. கொடியினை ஏற்றியும், கேக் வெட்டியும், இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் ரவி, பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வன், ஜாகிதாசெரீப், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி ஒன்றிய குழு உ றுப்பினர் தாமோதரன், கிளை செயலாளர்கள் ராமலிங்கம், அழகேசன், சேட்டு, ஆலாபுரம் வடிவேல், கள்ளியூர் ராசாராம், லோகநாதன், சின்னப்பன், முருகன், சேகர், விழுதுப்பட்டி சேகர், ரெயில்வே முருகேசன், மாது, விழுதுப்பட்டி முருகன், கவுண்டம்பட்டி ஆசிரியர் மனோகரன், சானவாஸ், அமிர்உசேன், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் செல்வராஜ், அக்பர், இளவரசன், கோவிந்தன், பரமசிவம், சிவராஜ், பாரதி, சுகனேஷ், ஜிலானி, சபி, பழனி, பாரதி, ரத்தினம், விஸ்வநாதன், முருகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×