என் மலர்
உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு கொண்டு வந்துள்ள ஆடுகளை படத்தில் காணலாம்.
புரட்டாசி மாதத்தையொட்டி போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்- ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற விவசாயிகள்
- லாரி, வேன்களில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
- புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் ஆடுகள் விற்பனை பெரும் சரிவையே சந்தித்து வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெரும் அதில் ஆட்டுச்சந்தை ஒரு பகுதியில் நடைபெறுவது வழக்கம்.
இங்கு விழா காலங்களில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடு, மாடு, கோழிகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து அந்த பணத்தைக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம்.
இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிங்களில் இருந்து லாரி, வேன்களில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் ஆடுகள் விற்பனை பெரும் சரிவையே சந்தித்து வந்தது.
இந்நிலையில் இன்று விற்பனைக்காக விவசாயிகள் அதிக அளவு ஆடுகளை கொண்டு வந்தனர். ஆனால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் ஏமாற்றுடன் தங்களது ஆடுகளை திரும்ப வீட்டிற்கு பிடித்து சென்றனர்.






