என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி போடி நகராட்சி சார்பில் 1000 மரக்கன்றுகள் நடுதல்
    X

    போடி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி போடி நகராட்சி சார்பில் 1000 மரக்கன்றுகள் நடுதல்

    • போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    பரமசிவம் கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், துப்புரவு அலுவலர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேசன், அகமது கபீர் மற்றும் கவுன்சிலர் மகேஸ்வரன் உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×