என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், ரெயில் மறியல் போராட்டம்
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்திருக்கிறது மேலும் அவரை எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.
- ஜனநாயக விரோத செயலை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.முரளிதரன், ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
" ராகுல் காந்தியின் "பாரத் ஜோடோ" யாத்திரை, மிகப்பெரிய வெற்றி பெற்றதை பா.ஜனதா கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த பொறாமையினால் மோடி அரசு, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடக்கூடாது என்ற பழிவாங்கும் நோக்கத்தில், சூரத் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்திருக்கிறது மேலும் அவரை எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.
இத்தகைய ஜனநாயக விரோத செயலை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
அன்று காலை 8 மணியளவில் தொடங்கவுள்ள இந்த போராட்டத்திற்கு, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்ல குமார் தலைமை தாங்குகிறார்.
இவ்வாறு, முரளிதரன் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது, மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர காங்கிரஸ் தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.






