என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கரூரில் தீயணைப்பு துறை சார்பில்  விபத்தில்லா பட்டாசு வெடிப்பது  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
  X

  தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.

  கரூரில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
  • தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  பரமத்தி வேலூர்:

  கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதக்காரன்புதூர் பகுதியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களில் தலைவரும், ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழக உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பயிற்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலையிலும், காலணி அணிந்தும் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்தும், நீண்ட வத்திக்குச்சிகளை கொண்டும் பற்ற வைக்க வேண்டும். பட்டாசுகளை குடிசை பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளான பெட்ரோல் பங்க், வைக்கோல் போர் போன்ற இடங்களில் வெடிக்கக் கூடாது. நைலான், பட்டு துணிகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இதில் கல்லூரிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×