என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒசூர் பக்த ஜனசபா சார்பில்,  19- வது ஆண்டு சாஸ்தா பிரீதி மற்றும் மகா ருத்ர விழா
    X

    நேற்று மாலை நடந்த ஆன்மீக சொற்பொழிவின்போது எடுத்த படம்

    ஒசூர் பக்த ஜனசபா சார்பில், 19- வது ஆண்டு சாஸ்தா பிரீதி மற்றும் மகா ருத்ர விழா

    • மகா ருத்ர விழா, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    ஓசூர்,

    ஓசூர் பக்த ஜனசபா சார்பில்,பஸ்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று 19 வது சாஸ்தா பிரீதி அய்யப்பன் பூஜை மற்றும் மகா ருத்ர விழா, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறவுள்ள விழாவில், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை,ஆன்மீக சொற்பொழிவு, திருமுறை விண்ணப்பம், திருப்புகழ் சம்பூரண நாராயணியம் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மேலும்,பக்தர்களுக்கு 3 வேளையும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை, விழாக்குழு தலைவர் சத்ய வாகீஸ்வரன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராமகிருஷ்ணா, ஒருங்கிணைப்பாளர் மணியன், தமிழ்நாடு பிராமண சங்க ஓசூர் மாநகர தலைவர் சுதா நாகராஜன் மற்றும் ஜனசபா நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.விழாவில் இன்று மாலை 6.30 மணிக்கு, துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    Next Story
    ×