என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தனியார் பள்ளி சார்பில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி -பிரகாஷ் எம்.எல்.ஏ.-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்
- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
- பள்ளி வேலை நாட்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
ஓசூர்,
ஓசூரில், ஆவலப்பள்ளி ஹட்கோ மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும், ஒரு தனியார் பள்ளி சார்பில், ஓசூர் பஸ் நிலையம் அருகே ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, நடந்த தொடக்க நிகழ்ச்சியில்,ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு, ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.முன்னதாக, பள்ளியின் தலைவர் அஸ்வத் நாராயணா வரவேற்றார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் பள்ளியின் சார்பில் நாள்தோறும், ஆதரவற்ற 200 பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, அதாவது பள்ளி வேலை நாட்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உணவு உண்ணும் தட்டுகளை, அவர்களே கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் மற்றும் பள்ளி முதல்வர் சங்கீதா பலால், பள்ளி துணை முதல்வர் பவானி ஜெயன் மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.






