என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்தியவர் சிக்கினார்
  X

  மது பாட்டில்களை கடத்தி சென்றபோது பிடிபட்ட வாலிபர்,அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

  இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்தியவர் சிக்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 298 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • மதுபாட்டில் கடத்திய ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  பென்னாகரம்,

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்கப்படுவதாக பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து குமார், பாபு, முருகன், சரவணன் ஆகிய போலீசார் வண்ணாத்திப்பட்டி-மாங்கரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

  அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

  பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மது பாட்டில் கடத்தியவர் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஸ்ரீதர் (வயது30) என தெரிய வந்தது. மேலும் இவர் அதியமான் கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பென்னாகரத்தில் விற்பதும் தெரியவந்தது.

  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபாட்டில் கடத்திய ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 298 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×