search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்

    • வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலவை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்,
    • ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்க கூட்டம் என தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக, ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்ட ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து, தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-

    தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவு கூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. நமது கிருஷ்ணகிரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வருகிற 8-ந் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், ஆட்சிமொழி சட்ட வரலாறு, ஆட்சி செயலாக்க அரசாணை, அரசு பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, மொழி பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலை சொல்லாக்கமும், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலவை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம், பொதுமக்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்க கூட்டம் என தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 200&க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதி, தாசில்தார் சம்பத், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×