search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் கிளை சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் கிளை சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை

    • திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டபதாக புகார் எழுந்தது.
    • லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மற்றும் அதிகாரிகள் சிறைக்குள் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கிளை சிறைச்சாலையில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் லஞ்சம் கேட்பதாகவும், கைதிகளுக்கு உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களை முறையாக வழங்காமல் பதுக்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியின் மனைவி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க வந்தபோது அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சம்பவத்தன்று கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் ேமாதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கைதிகளை வெவ்வேறு அறையில் பிடித்து அடைத்து வைத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு டி.ஐ.ஜி கடிதம் அனுப்பியிருந்த நிலையில் மதுரை சிறை கண்காணிப்பாளர்(பொ) வசந்தகண்ணன் திண்டுக்கல் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    மேலும் லஞ்சஒழிப்புத்துறை போலீசாரும் சிறைக்குள் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு கைதியிடமும் தனித்தனியாக சென்று விசாரணை நடத்திய போலீசார் புகார்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும், சி.சி.டி.வி காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் வேண்டும் என்று கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×