என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் ரூ.4½ கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்.

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் ரூ.4½ கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு

    • வடமதுரை மந்தை குளத்தை தூர்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி ரூ.4½ கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
    • இப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வடமதுரை:

    தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் வடமதுரை மந்தை குளத்தை தூர்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி ரூ.4½ கோடி மதிப்பில் நடந்து வருகிறது. தற்போது குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், மாவட்ட உதவி செயற்பொறியாளர் இசக்கி, வடமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் (பொறுப்பு), 14-வது வார்டு கவுன்சிலர் மற்றும் தி.மு.க நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அய்யலூர் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் உரப்பூங்கா, குப்பைகளின் மூலம் உரம் தயாரித்தல், மண்புழு பராமரிப்பு மற்றும் அய்யலூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள சமுதாய கழிப்பிடம், வண்டி கருப்பண சாமி கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடம் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தனர். இதில் அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, பேரூராட்சி தலைவர் கருப்பன் உள்பட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×