என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோடைக்கு முன்பே நுங்கு விற்பனை தொடக்கம்
  X

  கோடைக்கு முன்பே நுங்கு விற்பனை தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவை.
  • வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் நுங்கை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க தருமபுரி நெசவாளர் காலனியில் நுங்கு விற்பனை தொடங்கியது.

  கோடை காலங்களில் நுங்கு சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவை.

  சாதாரணமாக நுங்கு சாப்பிடுவதே சுவாரசிய மான ஒன்று. அதுவும் கிராமங்களில், பனை மரத்தடியில் அமர்ந்து புதிய நுங்கை சுவைப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அந்த மகிழ்ச்சியை கிராமத்தில் அனுபவித்தவர்களுக்கே புரியும்.

  கோடை காலங்களில் உடலில் உள்ள நீரின் அளவு விரைவாக குறைந்து, நாம் சோர்வடைந்து விடுவோம். நுங்கில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

  அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது. அதிலும் கோடையில் அதிகப்படி யான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருந்து வருவதால் கோடை காலங்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி உண்ணுகின்றனர்.

  ஏப்ரல் மாதத்தில் நுங்கு சீசன் தொடங்கும். தற்போது முன்கூட்டியே சீசன் தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதிகளில் இருந்து பனைத் தொழிலாளர்கள் பனை மரத்தின் நுங்குகளை வெட்டி எடுத்து வந்து தருமபுரி நெசவாளர் காலனி பகுதியில் விற்பனையை தொடங்கியுள்ளனர். இரண்டு நுங்கு பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. கோடைக்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் நுங்கை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

  Next Story
  ×