என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாயர்புரம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்
  X

  சாயர்புரம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
  • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி செய்திருந்தார்.

  சாயர்புரம்:

  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10-வது வார்டு புளியநகர் பகுதியில் நாசரேத் பிள்ளையன் மனை மர்காஷியஸ் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

  சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஞானராஜ் வரவேற்று பேசினார். நாசரேத் பிள்ளையன்மனை மர்காஷியஸ் நாட்டு நலபணி திட்ட அணிகள் எண் 59,63,131, ஆசிரியர்கள் சாந்தி சலோமி, சீயோன் செல்ல ரூத், பியூலா.ஹேமலதா, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் கல்லூரி மாணவிகள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி ஏற்பாடு செய்திருந்தார். தூய்மை பணி செய்த மாணவிகளை புளிய நகர் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.

  Next Story
  ×