search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை-விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் கலெக்டர் சாந்தி பேசிய காட்சி.

    நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை-விவசாயிகள் குற்றச்சாட்டு

    • ஏரி வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்பி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • பவர் கிரீட் நிறுவன மூலம் நிலத்தினை எடுத்துக்கொண்டு அதற்குண்டான இழப்பீடுகளை வழங்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    தனிப்பட்டா வழங்க 15 நாட்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற வருட கணக்கில் ஆகிறது என குற்றம் சாட்டினர். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளை பேச அனுமதிப்பதில்லை கூட்டம் அதிக நேரம் நடப்பதில்லை. 50 கிலோமீட்டர் கடந்து வந்தாலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என்றனர்.

    இதேபோன்று கடத்தூர் அடுத்த வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கரும்பு வெட்டும் எந்திரம் முன்பணமாக பெற்றுக்கொண்டு கரும்பு பாதியை அறுவடை செய்துவிட்டு மீதியை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். கூலி போக மீத பணத்தை திருப்பியும் தரவில்லை மேற்கொண்டு ஆட்களை வைத்து 3 மடங்கு அதிகம் செலவு செய்து கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் நில அளவைத் துறையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அளவிடு தொடர்பாக விளக்கம் விவசாயிக்கு தெரிவிப்பதில்லை தனியார் ஆட்களை வைத்துக் கொண்டு அளவீடு செய்கின்றனர் என குற்றம் சாட்டினார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி பேசுகையில், பவர் கிரீட் நிறுவன மூலம் நிலத்தினை எடுத்துக்கொண்டு அதற்குண்டான இழப்பீடுகளை வழங்கவில்லை அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

    தருமபுரி மாவட்டத்தில் ஐந்து டிராக்டர்கள் மட்டுமே உள்ளன அதனை கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உழவு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை முன்பு உள்ளது போல தனியார் டாக்டர்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்விபோது, விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது ஏரி வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்பி விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் விலை நிர்ணயம் செய்தது போல தருமபுரி மாவட்டத்தில் மாங்காய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×