என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம்
    X

    சுரண்டை சிவகுருநாதபுரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்த காட்சி.

    சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம்

    • தென்காசி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நகராட்சி தலைவர் வள்ளி முருகன் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    சுரண்டை:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் தற்பொழுது ஆங்காங்கே காய்ச்சல் பரவி வருகிறது. நகராட்சி தலைவர் வள்ளி முருகன் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கி பேசும்போது, பொதுமக்கள் நலன் கருதி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படும். நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், வார்டு உறுப்பினர்கள் வேல் முத்து, அமுதா சந்திரன்,ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×